அமெரிக்காவின் சுகாதாரத்துறைச் செயலராக சேவியர் பெக்கெராவை (Xavier Becerra) ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், அடுத்த மாதம் 20-ந் திகதி பதவியேற்கவுள்ள நிலையில், தனது அமைச்சரவையை அறிவித்து வருகிறார்.
இதற்கமைய அமெரிக்காவின் புதிய சுகாதாரத்துறை செயலராக கலிபோர்னியா மாகாணத்தின் சட்டமா அதிபர் சேவியர் பெக்கெராவை (Xavier Becerra) நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், சுகாதாரத்துறையை வழி நடத்தும் சவாலான பணியை சேவியர் பெக்கெரா (Xavier Becerra) ஏற்க உள்ளார்.