அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் லொயிட் ஒஸ்டினை தேர்வு செய்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின பாதுகாப்புச் செயலாளராக காணப்படுகின்றார். அத்துடன் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெருமையையும் கிடைக்கவுள்ளது.
இவர் லொயிட் ஒஸ்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளுக்கு பொறுப்பாகச் செயற்பட்டள்ளார்.