ஆல்பேர்ட்டாவில் கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளுக்கு உதவியளிப்பதற்கு இராணுவத்தினர் தயாராகி வருவதாக கனடிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மாகாணத்தின் பிரைரி பகுதிகளில் இராணுவத்தினை அனுப்புவதற்கு தயார்ப்படுத்தல்கள் பூர்த்தியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாடாளவிய ரீதியிலும் உதவிகளை வழங்குவதற்கான தயார் நிலையில் இராணுவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தடுப்பூசி விநியோகத்திற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை இராணுவம் வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.