டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் புகையிரத மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதேபோல், ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் புகையிரத நிலையத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
நாடு தழுவிய புகையிரத,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.