2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்தநிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2009 ஜனவரி முப்பதாம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது. நான் இதனை எதிர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குறுகிய காலப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் அந்த மோதல்களில் 300 படையினர் கொல்லப்பட்டதுடன் படையினர் நான்கு கிலோமீற்றர் தூரம் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.