கொழும்பில் இருந்து கொண்டு வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான திட்டங்கள் குறித்து முடிவெடுக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தென்பகுதி மக்களின் வசதிகளுக்காக, வட, கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும்போது அப்பகுத மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துகளையும் செவிமடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.