இந்த ஆண்டு இறுதிக்குள் கனடாவில் கொரோனா தடுப்பூசி போடும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
முதற்கட்டமாக டிசம்பர் நிறைவுக்குள் 2இலட்சத்து 49ஆயிரும் தடுப்பு மருந்தினை கொள்’வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கே முதலில் இந்த ஊசி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
ஆல்பர்ட்டா, மானிடோபா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் இறப்பு வீதம் அதிகரித்து வருகையில் அச்சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளதாகவும் கூறினார்.