ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioentech) கொரோனா தடுப்பூசி யின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் இந்தவார இறுதிக்குள் பூர்த்தியாகும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடிய சுகாதாரத்துறை இதுவரையில் ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioentech) தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கவில்லை.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வது, களஞ்சியப்படுத்துவது, விநியோகிப்பது, எத்தகைய தரப்பினருக்கு முதலில் உட்செலுத்துவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் கணிசமான அளவில் பூர்த்தி செய்துவிட்டது.
இந்நிலையில் ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioentech) தடுப்பூசிக்கான அனுமதி தாமதமாவதற்கான காரணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நிபுணர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அத்துடன், இந்த விடயத்தில் நிதான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆய்வுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.