பிரித்தானியாவில் ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioentech) கொரோனா தடுப்பூசி வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதுடைய மார்கரெட் கீனனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபராக விளங்கும் இவருக்கு பிரித்தானிய நேரப்படி இன்று காலை 6:31 மணிக்கு பல்கலைக்கழக வைத்தியசாலையில் தடுப்பூசிபோடப்பட்டது.
பிரித்தானியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதற் கட்டமாக தொற்றினால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கும் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.