சிறிலங்காவின் மிகப் பெரிய காற்றாலை மின் நிலையம் இன்று மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் – நடுக்குடா பிரதேசத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலை மின் திட்டத்தை, பிரதமர் மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், 141 மில்லியன் டொலர் செலவில் இந்த காற்றாலை மின் திட்டத்தை சிறிலங்கா மின்சார சபை அமைத்துள்ளது.
இங்கு தலா 3.45 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், ஆண்டுக்கு 380 மில்லியன் அலகு மின்சாரத்தை இந்த காற்றாலைத் திட்டத்தின் மூலம் பெற முடியும்.
இதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு 2.இலட்சத்து 85 ஆயிரம் மெட்றிக் தொன், கரியமில வாயு வௌியேற்றப்படுவதை தடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.