கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர், முதல் முறையாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நூறு சதவீதமான பயணிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளளது.
நாளை தொடக்கம் இந்த அனுமதி நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 60 சதவீத பேருந்துகளை இயங்குவதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, பேருந்துகளை முழு அளவில் இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.