மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலத்தாமதம் ஆகலாம் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையில் பணியாற்றும் 3 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த திட்ட அமுலாக்கம் ஒரு ஆண்டுக்கு பிற்போடப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தள்ளார்.