பாகிஸ்தானில் இராணுவத்தின் தலையீட்டினால், நாட்டின் எந்தவொரு பிரதமரும் தமது முழு பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை என்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சியின் சமூக ஊடக மாநாட்டில் பேசிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“இதுவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் எவருமே தங்கள் அரசியலமைப்பு காலத்தை நிறைவு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு பிரதமரும் பதவியேற்று சில ஆண்டுகளில் ஜனநாயகம் தாக்கப்பட்டு, இராணுவச் சட்டம் விதிக்கப்படுகிறது.
தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் மீறப்படுகிறது. நாட்டின் நிறுவனர்கள் துரோகிகளாக கருதப்படுகின்றனர்.
பிரபலமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைவர்கள் கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டனர்.” என்றும் நவாஸ் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.