லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 15 போட்டிகள் நிறைவில் Jaffna Stallions அணி தரப்படுத்தலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
Jaffna Stallions மற்றும் Dambulla Vikings அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழை காரணமாக தடைப்பட்ட நிலையில் முடிவின்றி கைவிடப்பட்டது.
அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Dambulla Vikings அணி தரப்படுத்தலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
லங்கா ப்ரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நாளை (09) நடைபெறவுள்ள முதல் போட்டியில் Kandy Tuskers மற்றும் Jaffna Stallions அணிகள் மோதவுள்ளன.
நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் Galle Gladiators மற்றும் Dambulla Vikings அணிகள் மோதவுள்ளன.