வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சினால் 101 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 27 மருத்துவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 20 மருத்துவர்களும், ஏனைய மாவட்டங்களுக்கு 53 மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தவிர்ந்த, ஏனைய அனைத்து மாவட்ட, ஆதார மற்றும் பிரதேச மருத்துவமனைகளிலும், இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நியமனங்கள் அமைந்துள்ளதாக, மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை,, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும் ஒரு தொகுதி மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது