உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலால் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 20 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பு அமெரிக்காவின் டென்வர் பல்கலைகழகத்துடன் இணைந்து கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது.
மேலும், கொரோனா தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், மக்கள் கடும் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய இறப்பு விகிதங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மிக சமீபத்திய வளர்ச்சி கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், கொரொனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு கணித்ததை விட 4.4 கோடி மக்கள் மக்கள் கடுமையான வறுமையில் சிக்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் 102 மில்லியன் பெண்கள் கொரோனா தொற்றுக்கு முன்பு கணக்கிட்டதை விட அதிக வறுமைக்கு செல்வார்கள் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழிற்துறையில் 80 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.