அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணிப்பதை, அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1000 கிலே மீற்றர் வீதிகள் செப்பனிடப்பட்ட காலத்தில் கூட தமிழ் பிரதேசங்களில் அவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெறவில்லை.
ஒரு இலட்சம் காபட் வீதி, 10 ஆயிரம் வேலை வாய்ப்பு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
ஆனால் எங்களுடைய பிரதேசங்களில் ஒரு வேலைத்திட்டமாவது ஆரம்பிக்கட்டுள்ளதா என்பதைப் பார்த்தால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எனவே அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணிப்பதை, அரசாங்கம் கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.