ஆந்திர மாநிலத்தில், எலுருவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருப்பதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் எலுருவில் 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நோயின் தன்மையை அறிய முயன்ற மருத்துவர்கள் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில்,இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன,
இதன் முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.