ஆந்திரா மாநிலத்தில் எலுரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் 525 நோயாளிகள் கால்-கை வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வலிப்பு வந்து நோயாளிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். நோயாளிகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் வருவதாக தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் 171 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 354 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.