இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு அணி முகாம்களிலும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, தென்னாபிரக்காவுக்கான இங்கிலாந்தின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இத் தொடரானது பிற்காலத்தில் விளையாடப்படலாம் என்றும் இரு கிரிக்கெட் அணி நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரு போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாமல் போயுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.