எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரையில் மனிடோபாவில் கொரோனா பாரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட விசேட விதிமுறைகள் அமுலில் இருக்கும் என்று மாகாண முதல்வர் பிரையன் பலிஸ்டர் (Brian Pallister) தெரித்துள்ளார்.
மனிடோபாவில் கொரோனா தொற்றுப் பரவலானது 13.3சதவீதமாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பினை தான் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலைமைகள் கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்தும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மேலதிக கட்டுப்பாடுகள் அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிடோபாவின் எதிர்காலத்திற்காக தீர்க்கமான முடிவுகள் அவசியமாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் எதிர்வரும் மாதம் எட்டாம் திகதி வரையில் கொரோனா பாதுகாப்பு வதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.