ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்து விசாரணை அறிக்கைகளும், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற 8 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட எல்லா விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன.
அனைத்து விசாரணை அறிக்கைகளும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக, இந்த அறிக்கைகளைப் பரிசீலனை செய்வதற்காக, சட்டமா அதிபரினால் 12 அரச சட்டத்தரணிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இன்னமும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிலகாலம் தேவைப்படும்” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.