ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.