கொரோனா பாதிப்பின் காரணமாக எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பத்தில் கனடாவின் மூலோபாயம் மாற்றப்பட வேண்டி ஏற்படலாம் என்று பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலனி ஜொலி (Melanie Joly) கூறியுள்ளார்.
கனடிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மற்றும் எதிர்கால மீள் எழுகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொற்றைத் தடுப்பதற்கான ஊசிகள் போடப்பட்டதன் பின்னரும் கூட நிலைமைகள் வேகமாக சீரடையும் என்று உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சமஷ்டி அரசாங்கம் கனடிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உரிய ஒதுக்கீடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.