சிறிலங்கா பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிகளில் இருந்து தான் உள்ளிட்ட அனைவரும் விலகியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பதவி விலகல் கடிதங்களை இன்று நிதியமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்த ஐவரும் இவ்வாறு பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.