தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் அதிகளவும் 20 மாவட்டங்களில் இயல்பான அளவும், வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாகவும், அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
இதனால், தமிழகத்தில் 3,982 ஏரிகள் நிரம்பி உள்ளன, சென்னையில் நீர்மட்டம் அளவு அதிகரித்துள்ளது என்றும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.