ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakrisade) படுகொலை செய்யப்பட்ட பின்னர், தெஹ்ரானில் அமைந்துள்ள பாலத்தின் மீது “நன்றி மொசாட்” என்ற தலைப்புடன் இஸ்ரேலியக் கொடியுடன் ஒரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதாகையை யார் வைத்தனர் என்பது குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakrisade) கொல்லப்பட்டதற்கு ஈரானிய அதிகாரிகள் இஸ்ரேலிய உளவுத்துறையையும், நாடுகடத்தப்பட்ட அரசியல் குழுவான ஈரானின் மக்கள் முஜாஹிதீனையும் குற்றம் சாட்டிய சுமார் இரு வாரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரானிய சட்டத்தின் பிரகாரம் தனது நாட்டினுள் இஸ்ரேலிய கொடிகள், சின்னங்கள் அல்லது அடையாளங்களைப் பயன்படுத்துவதை தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.