தான் உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணியானது இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணைய மாட்டாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பந்தனும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள் அவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம்.
ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள் எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசு கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மேலும் தெரிவித்தார்.