திட்டமிட்டு மத சுதந்திரத்தை மீறும் 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
உலகில் திட்டமிட்டு மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகள் தொடர்பான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ (mike pompeo) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டு மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளாக 8 நாடுகள் அறிவித்துள்ளார்.
மியான்மர், எரித்ரியா, நைஜீரியா, வடகொரியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், மிக மோசமான மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அத்துடன், ரஷ்யா, கியூபா, நிக்கரகுவா மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகள் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.