தேசிய கொள்கை வகுக்கவும், நாட்டில் ஆரம்ப பாடசாகைளை ஒழுங்குபடுத்தவும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த குழு தொகுத்த அறிக்கை இந்த மாதம் 11 ஆம் திகதி கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பீ.வை.ஜீ. ரத்னசேக்கர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர், ஆரம்ப பாடசாலை முறையை சீரமைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கொரோனா நெருக்கடியால் 45 ஆயிரத்துக 182 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அநேகர சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சில முன்பள்ளி ஆசிரியர்கள் பிற வேலை வாய்ப்புகளை நாடுகிறார்கள் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.