வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான மூன்று அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவாரத்தை நடத்தவுள்ளது.
விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மை குறிப்பிடத்தக்கது.