உலகின் மிகஉயர்ந்த மலைச் சிகரமாக எவரெஸ்ட்டின் உயரம், அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை கணக்கிட்டு, அதன் தற்போதைய உயரம் 8 ஆயிரத்து 848 மீற்றர், 86 சென்ரி மீற்றர் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இருந்து உயரத்தை விட, தற்போது உயரம், 86 சென்ரி மீற்றர் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதால், அதன் உயரம் மீண்டும் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.