கனடாவில் கொரோனா தீவிரமடைந்து வந்தாலும், மூன்றிலொரு பகுதியினர் விடுமுறை நாட்களில் உறவினர்கள் மற்றும் நட்பர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாத பிற்பகுதியில் ஆராய்ச்சி நிறுவனமான அங்கஸ் ரீட் (Angus Reid) கார்டஸுடன் (Cardus) இணைந்து செய்த புதிய ஆய்வொன்றில் ஐயாயிரம் பேர் பங்கெடுத்தனர்.
இதில் 30சதவீதம் பேர் தாங்கள் அன்புக்குரியவர்களை உள்நாட்டில் சந்திக்கப் போவதாகவும் 10சதவீதம் பேர் தங்கள் சமூகம் அல்லது மாகாணத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன் மூலம் விடுமுறைக்காலம் தொடர்பில் கனடியர்களின் திட்டமிடல்கள் புலனாகுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.