மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளார்.
அரசின் முன்மொழிவை பற்றி டெல்லி மற்றும் ஹரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு அடுத்த கட்டமாக எவ்விதமாக பதிலளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.