ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியானது அபாயங்களை விடவும் நன்மைகளையே அதிகமாக கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளதாக கனடிய சுகாதாரத்துறையின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சுப்ரியா சர்மா தெரிவித்துள்ளார்.
சிறந்த தடுப்பூசிகள் என்று மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்ளும் பட்சத்திலேயே அதன் நன்மைகளை அடைய முடியும் என்பதை அறிவோம் என்றும் கூறினார்.
வெளிப்படையான ஆய்வுகள் மற்றும் அறிவிப்புக்கள் மூலம் தற்போது தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு அதிகமான தகவல்களை வழங்குவதன் ஊடாக முடிவுகளை அவர்கள் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என்றும் கருதுகின்றோம் என்றார்.