சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, தமது உறவுகளை கண்டுபிடித்து தரக்கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னாரில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இந்த அமைதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் டெலிகொம் சந்தியில் ஆரம்பமாகிய இந்த ஊர்வலம், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வழியாக, மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக, அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.