காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே, மறுக்காதே மறுக்காதே எமது உரிமைகளை மறுக்காதே, அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டிக்கிறோம், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த போதிலும், தமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மக்களின் உரிமைகள் மீறப்பட்ட இந்த நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எதற்காக செயற்படுகிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சர்வதேச மனிதை உரிமைகள் தினத்திலாவது சர்வதேச சமூகம் கண்மூடி இருக்காமல் பாரபட்சமின்றி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து, எமக்கான தீர்வினை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.