காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், பட்காம் மாவட்டத்தின் ராவல்புரா பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வழக்கமான வாகன சோதனையின்போது வாகனத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பிடிபட்ட பயங்கரவாதி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய நபரான தரீக் அகமது பட் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.