சீனாவின் மருந்து நிறுவனமான சினோபார்ம் (Synoform) தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து, நோயாளிகளின் உடலில் 86 சதவிகிதம் சிறப்பாகச் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் (சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் மொத்தம் 125 நாடுகளைச் சேர்ந்த 31 ஆயிரம் பேரிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பரிசோதனையில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். 28 நாட்களில் இரண்டு ஊசி மருந்தளவை ஒவ்வொருவரும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.