சீனாவுடனான உறவுநிலை பழைய நிலைக்குத் திரும்புவது கடினம் என்று, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீன எல்லை பிரச்சினை ஏற்பட்டு 8 மாதங்களாகியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் அடிப்படை பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவுடனான உறவு மிகமோசமான கட்டத்தில் உள்ளது என்றும், இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை அவர்கள் மதிப்பதில்லை. அதுவே பிரச்சினைக்குக் காரணம் என்றும், ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.