தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இந்த வாரம் பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதன்போது அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் தங்கள் நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளையோ அல்லது பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும் நடவடிக்கைகளையோ ஒரு போதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என பிரிட்டன் கனடா தூதுவர்கள் தெரிவித்தனர் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.