நத்தாருக்கு பின்னர் மற்றுமொரு கொரோனா கொத்தணி உருவாகலாமென அமெரிக்காவின் சிரேஷ்ட தொற்றுநோய் நிபுணர், வைத்தியர் அந்தோனி பௌஸி ( Anthony Fauci) எச்சரித்துள்ளார்.
நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடர்ந்து ஏற்பட்ட கொத்தணி தற்போது கட்டுப்படுத்தப்பட்டாலும், இந்த அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் புதுவருட பண்டிகைக் காலம் மேலும் சவாலானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் உள்ளதுடன், சராசரியாக நாளொன்றில் 2 இலட்சம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.