பிரான்சில் உலங்குவானூர்தி ஒன்று மலையில் விழுந்து நொருங்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயரமான மலைகளில் மலையேற்ற வீரர்களை மீட்பது குறித்த பயிற்சிக்காக எஸ்.ஏ.எப். நிறுவனத்தின் உலங்குவானூர்தி ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலாக பறந்து சென்றது.
இந்த உலங்குவானூர்தி மலையில் சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, மலையில் விழுந்து நொறுங்கியது.
இதில் உலங்குவானூர்தியில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். அதிலிருந்து குதித்த விமானி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.