பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula van der Leyen) ஆகியோர் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க இணங்கியுள்ளனர்
பிரஸ்ஸல்ஸில் பல மணிநேரம் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் தாங்கள் முக்கிய விடயங்களில் வெகு தொலைவில் இருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் டிசம்பர் 31ஆம் திகதி பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட முயற்சித்து வருகின்றன.
இதற்காக இந்த வார தொடக்கத்தில், ஜோன்சன் மற்றும் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula van der Leyen) ஆகியோரின் கூட்டு அறிக்கை மூன்று “முக்கியமான” உறவுகளை மேற்கோள் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.