பைசர் (Pfize) மற்றும் பயோஎன்டெக்(BioNTech) தடுப்பூசி பயன்படுத்தப்பட ஆரம்பிக்கும் சமயதத்திலிருந்து அவற்றின் பிரதிபலிப்புகள் தொடர்பில் கவனமாகக் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதாரத்துறை, மற்றும் பொதுசுகாதார முகாமை பிரிவு ஆகியவற்றின் கூட்டிணைவில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேதேவேளை, தடுப்பூசி தொடர்பான பாதுகாப்புக் குறித்து கவலைகள் அடையாளம் காணப்பட்டால் உடனடியான நடவடிக்கைகள் தயக்கமின்றி முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி நிறுவனமும் தமது உற்பத்திகளின் தரங்கள் பற்றி மேம்படுத்தப்பட்ட தகவல்களை உரிய கால இடைவெளியில் அறிவிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.