இந்தியப் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விபரங்களை அளிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்திடம், இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து, பிரதமர்கள் மன்மோகன்சிங், மோடி ஆகியோரது வெளிநாட்டு பயணத்துக்கு பயன்படுத்தப்பட்ட சிறப்பு விமானங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு, இந்திய விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய விமானப்படை மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் இந்த தகவல்கள் பாதுகாப்பு முக்கித்துவம் வாய்ந்தவை என்பதால், அவற்றை அளிக்க முடியாது.
இவை பிரதமரின் பாதுகாப்பு கட்டமைப்பு செயல்படும் விதம் தொடர்பானவை. இவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவெளியில் கொண்டுவர முடியாது.
அப்படி வெளியே தெரிவிப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும். நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிராக அமைந்து விடும்.” என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது.