சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சிறப்பு சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ், யாழ்ப்பாணம், கந்தகாடு மற்றும் கல்லெல்ல ஆகிய பகுதிகளில் இந்த கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இரண்டாவது கொரோனா அலை வீசத் தொடங்கிய பின்னர், சிறைச்சாலைகளில் மூன்றாவது கொத்தணி உருவாகியுள்ளது.
சிறைச்சாலைகளில் 2600இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.