இத்தாலியின் வெனிஸ் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதாக, செய்திகள் கூறுகின்றன.
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் ஒன்றான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் முழுவதும், கடும் காற்று, கனமழையால் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது..
மோசமான வானிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக நகரின் பல இடங்களில் அதிநவீன வெள்ளத்தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்ட போதும், திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
நகரிலுள்ள புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்கள் தண்ணீரால் நிரம்பிக் காணப்படுகின்றன.