யுத்தத்தின் இறுதியிலே கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்,
நிதி அமைச்சின் நடவடிக்கைகள் ,நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முழுமையான இனவாத கோணத்திலானது எனவும் குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்த தினத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்,சிறைகளில் வாடும் பிள்ளைகளை நினைத்து கதறும் பெற்றோர் என வடக்கு கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.