ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் கொரோனா முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிராக ரொறன்ரோ தேவாலயம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
மத நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மாகாண அரசின் இந்த கொரோனா கட்டுப்பாடு, நாட்டின் அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும், இது மத உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், ரிஐசிசி எனப்படும், ரொறன்ரோ தேவாலயம், உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.